பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

உதகை லவ்டேல் மலை ரயில் நிலையத்தின் 117 வது ஆண்டு விழா கோலாகல கொண்டாட்டம்.
உதகை லவ்டேல் மலை ரயில் நிலையத்தின் 117 வது ஆண்டு விழா கோலாகல கொண்டாட்டம். 1907 ம் ஆண்டு கட்டப்பட்ட லவ்டேல் ரயில் நிலையத்தில் கேக் வெட்டியும், தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடியும் கொண்டடிர். அவர்களுடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் உலக புகழ் பெற்றதாக விளங்குவதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் . இந்த நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில் நிறுத்தங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ரயில் நிலையங்களின் கொண்டாட்டங்களை " Celebrates Station Mahotsav 2025 " எனறு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை லவ்டேல் ரயில் நிலையம் கடந்த 1907 ம் ஆண்டு கட்டப்பட்டது தற்போது 117 வது ஆண்டை கடந்துள்ள நிலையில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் கேக் வெட்டி , இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் . இந்த விழாவில் தோடர் பழங்குடியின. பெண்கள் கலந்து கொண்டு மலை ரயிலின் சிறப்புகளை பற்றி பாடி பாரம்பரிய நடனம் ஆடினர். அப்போது அதை ஆர்வத்தோடு கண்டு ரசித்த சுற்றுலா பயணிகளும் தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர். 117 வது அழகிரியில் வாசகத்தை குறித்த கேக் வெட்டி, இனிப்புகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story