பணி ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்பி சால்வை அணிவித்து வாழ்த்து.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து வாழ்த்து.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து வாழ்த்து. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த சார்பு ஆய்வாளர்கள் திரு. ரவிச்சந்திரன், திரு. நீதிவேந்தன், திரு. குருசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு. நாராயணன், திரு. இசக்கிராஜ், திரு. சண்முகம் மற்றும் தலைமை காவலர் திரு. அய்யம்பெருமாள் ஆகியோர் காவல்துறையில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து நேற்றுடன் (31.03.2025) பணி ஓய்வு பெற்றனர். மேற்படி பணி ஓய்வு பெற்ற 7 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இன்று (01.04.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவித்து கௌரவித்து, அவர்களின் சிறப்பான பணி குறித்து பாராட்டி பணி நிறைவு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story