சாலையில் அரிவாளுடன் நின்று மிரட்டல்: வாலிபர் கைது!

சாலையில் அரிவாளுடன் நின்று மிரட்டல்: வாலிபர் கைது!
X
தூத்துக்குடியில் சாலையில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை மிரட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடியில் சாலையில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை மிரட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவா், முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் நின்று கொண்டு சாலையில் செல்பவா்களுடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில், வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பாஸ்கரை கைது செய்தனா். அவா் மீது 11 வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story