தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூறு நாள் வேலைத்திட்ட கூலி நிலுவையை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

X

100 நாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை போதுமான அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில், செய்த வேலைக்கு கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100 நாள் வேலைத்திட்ட கூலி மற்றும் வேலை ஆட்களை குறைக்காமல் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி மற்றும் வரிச் சலுகை செய்யும் மத்திய அரசு, 100 நாள் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை சட்டப்படி வட்டியுடன் வழங்க வேண்டும், இத்திட்டத்தில் 200 நாள்களாக அதிகப்படுத்தி தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும், ஒரு நாள் ஊதியம் 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை போதுமான அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் இச்சங்கத்தின் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story