தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்காணல்

X

தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற்றது.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் மற்றும் திமுக பொறியாளர் அணி மாநில செயலாளர் கருணா ஆகியோர் அறிவுறுத்தலின்படி, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. நேர்காணலில் பகுதி நகர ஒன்றிய மற்றும் பேரூர் கழக திமுக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொண்டனர். நேர்காணலில் பங்கேற்ற அனைவரிடமும் அவர்களது கட்சிப் பின்னணி, கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் கேட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ஆபிரகாம், மாரிராஜ், ஜாபர், ரஞ்சித் மாநகர அமைப்பாளர் ரூபன் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஸ்ரீதர், பெரியசாமி, மாரிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story