குளித்தலை ஒன்றிய பாஜக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் மற்றும் இனுங்கூர் கிராமத்தில் பாரதீய ஜனதா கட்சி குளித்தலை ஒன்றியம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில மகளிரணி துணை தலைவர் மீனாவினோத்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், தேர்தல் வந்துட்டாலே பொய் பித்தலாட்டத்தை ஆரம்பிக்கிற கட்சி எதுனா அது திமுகதான், மும்மொழி கொள்கையை எப்படி மறக்க அடிக்கிறது, டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழலை எப்படி மறக்கடிக்கிறது என தொடர்ந்து எதோ பொய்யான திட்டத்தை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கின்றனர். நிரந்தரமாக சாராய ஆலை, டாஸ்மாக்கை மூட வேண்டும், 1000 கோடி ஊழலை முன்னெடுத்துகின்ற இந்த திமுக அரசை இந்த தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரு புதிய சபதத்தை எடுத்து பாஜக கட்சியினர் உழைத்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய தலைவர் ரஞ்சித்குமார், நகர தலைவர் ரம்யா கண்ணன், ஒன்றிய பொது செயலாளர் ராஜகோபால், ஒன்றிய துணைத் தலைவர் சங்கீத்குமார், ஒன்றிய செயலாளர்கள் மனோஜ், ஹரிராம் குமார், பாலசுப்பிரமணியன். மகளிர் அணி தலைவி சுதா, மக்கள் சாமிநாதன், குளித்தலை ஒன்றிய பொறுப்பாளர் விநாயகமூர்த்தி, கருணாகரன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜவேல், ஒன்றிய பொறுப்பாளர் சாமிதுரை, தோகைமலை ஒன்றியம் ராஜா பிரதீப் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story