தேன்கனிக்கோட்டை: பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் சிறையில் அடைப்பு.

X

தேன்கனிக்கோட்டை:பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் சிறையில் அடைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தேர்பேட்டை பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20) என்பவர் பேட்டராயசாமி கோயில் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த வழியாக வந்த அரசு பேருந்தை அடித்து நொறுக்குவேன், தீ வைத்து விடுவேன் நான் பெரிய ரவுடி என சத்தம் போட்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story