சிலைகள் மீட்பு

X

பவானி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் கைதானவர் வீட்டில் சிக்கிய சிலைகள்
சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் சம்பத்குமார் (38). ஈரோடு மாவட்டம் பவானி செங்காடு பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பவானி சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வழக்கில் சம்பத்குமாரை பவானி போலீசார் கடந்த 27ஆம் தேதி கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது தொடர்ந்து புகார்கள் வருவதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பவானியில் அவரது வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரின் வீட்டின் அருகே 15 கிலோ எடையில் இரண்டரை அடி உயரம் கொண்ட பித்தளையினால் ஆன ராமர், சீதை சிலைகளை கைப்பற்றினர். சிலைகளை சம்பத்குமார் கடத்தி வந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story