ஆதிதிராவிட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை துணை ஆட்சியரிடம் மனு

பாதுகாப்பில்லாத குடியிருப்பு பகுதி மற்றும் குடிநீர் சாலை வசதி இல்லாமல் பெரும் அவதி ஊற்றி வரும் ஆதி திராவிட மக்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆதிதிராவிட பொதுமக்களின் வீடுகள் மிகவும் சேதம் அடைந்து தரமற்றதாக இருந்து வருகிறது. மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளான குடிநீர் கழிவுநீர் வாய்க்கால் சுகாதார வளாகம் கழிவறை போன்ற வசதிகள் எதுவும் இல்லாததால் ஆதிதிராவிட இன மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் குறிப்பாக பெண்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் நலமுடனும் சுகாதாரமுடனும் வாழ தரமான புதிய காலனி அமைத்து தரக்கோரி துணை ஆட்சியர் கோகுல் மனு வழங்கி தங்களின் மனுவை சிறப்பு கவனம் எடுத்து விரைவில் காலனி அமைத்து தர வேண்டுமாய் கேட்டுக் கொண்டனர்.
Next Story