ஜெயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கமத்தினர் இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டம்.

ஜெயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கமத்தினர் இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டம்.
X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கமத்தினர் இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அரியலூர், பிப்.1- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கமத்தினர் இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.போராட்டத்திற்கு ஜெயங்கொண்டம் வட்டத் தலைவர் கோபி தலைமை தாங்கினார்,வட்ட செயலாளர் தேவி முன்னிலை வகித்தார்,அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் சிறப்புரை ஆட்சி பேசினார் வட்டத் துணைத் தலைவர் கணேசன் நிறைவடை ஆற்றினார். போராட்டத்தில் CPS சந்தா இறுதி தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33ல் உரிய திருத்தம் செய்து கருனை அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும், வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை எழிலகத்தில் நடைபெற்ற 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் கிராம உதவியாளர் சங்கத்தின் கோரிக்கை குறித்து நான்கு மாதத்தில் தீர்வு வழங்கப்படும் என்று எழுத்து பூர்வமாக ஒத்து கொண்டதை விரைவில் நிறைவேற்ற வேண்டும், அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ 15700 கிராம உதவியாளர்களுக்குவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை 02.04.25 அன்று காலை 8 மணி வரை நடைபெறும் இப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தில் விமான வேல், குமரன் மதியரசன் ராஜேஸ்வரி செல்வி வசந்த சூர்யா தீபிகா சங்கீதா விமல் ராஜ் தனசேகர் அருண் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.
Next Story