செருவாவிடுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்

மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செருவாவிடுதி வடக்கு ஊராட்சியில், திமுக நெசவாளர் அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா, பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகப்பை மற்றும் எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி. பழனிவேல் தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக் குமார் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செருவாவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள புத்தகப்பை, எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேராவூரணி வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் கோ. இளங்கோவன், பட்டுக்கோட்டை திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.என். செந்தில் குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயராமரன், தங்க.ராமஜெயம், பன்னீர்செல்வம், இளைஞர் அணி ஆரோ அருள், அரசு, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.பன்னீர்செல்வம் செய்திருந்தார். நிறைவாக, பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.கண்ணன் மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். பட்டுக்கோட்டை இதேபோல, பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் திமுக இளைஞர் அணி சார்பில் டாக்டர் ஆர்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏவும் மாநில தணிக்கைக் குழு உறுப்பினருமான ஏனாதி பாலசுப்ரமணியம் ஆகியோர் திறந்து வைத்து நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், மகளிர் அணி தீபலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story