திருவையாற்றில் கீழ வெண்மணி தியாகிகள் கொடி ஊர்வல பயணக்குழுவினருக்கு வரவேற்பு 

பயணக்குழுவினருக்கு வரவேற்பு 
மதுரையில் வரும் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்கு,  நாகை மாவட்டம் கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து செல்லும், கொடி ஊர்வல பயணக்குழுவினருக்கு   தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூர், திருச்சோற்றுத்துறை ஆகிய  இடங்களில், திருவையாறு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன்  வரவேற்பு அளித்தனர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழ உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சாமி.நடராஜன், ஜெயசீலன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன்,  மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், சி.ஜெயபால் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.பழனிஅய்யா, எம்.ராம், கே.மதியழகன், எம்.கதிரவன்,  பி.ஏ.பழனிச்சாமி, வெண்ணிலா, கண்டியூர் கிளைசெயலாளர் கே.ராமமூர்த்தி,  யு.புண்ணியமூர்த்தி,  பி.கலியமூர்த்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story