அடிமுறை போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்கள் குவித்த நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள்

அடிமுறை போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்கள் குவித்த நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள்
X
அடிமுறை போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்கள் குவித்த நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள்
இந்திய வர்ம அடிமுறை சம்மேளனம் சார்பாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் 7வது தேசிய அடிமுறை போட்டி நடைபெற்றது இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட அடிமுறை சங்க செயலாளர் நவீன்குமார் தலைமையில் திருச்செங்கோட்டில் இருந்து 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு உலக அடிமுறை சம்மேளனத்தின் நிறுவனர் பேராசான் செல்வராஜ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Next Story