பீர் பாட்டிலால் குத்தியவர் கைது

X

கைது
திருக்கோவிலுார், சந்தப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன், 38; நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் கனகனந்தல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு, பின்புறம் குடிக்க சென்றார்.அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் முத்து அருண், 29; குடிக்க மது கேட்டு, மணிகண்டனுடன் தகராறு செய்தார். அவர் கொடுக்க மறுத்ததார். ஆத்திரம் அடைந்த முத்து அருண் அருகில் கிடந்த பீர்பாட்டிலை எடுத்து மணிகண்டனை குத்த முயன்றார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், வழக்கு பதிவு செய்து முத்து அருணை கைது செய்தனர்.
Next Story