சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

X

சாலை விபத்தில் உயிரிழந்த வேலுச்சாமி என்பவருக்கு உரிய இழப்பீடு 12,46,544 தொகை வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் எரகாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் வேலுச்சாமி வயது 50 விவசாய வேலை செய்து செய்து வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு தாராபுரம் பகுதியில் இருந்து பூளவாடி சாலையில் தொப்பம்பட்டி பிரிவு அருகில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாராபுரத்தில் இருந்து பூளவாடி செல்வதற்காக வந்த அரசு பேருந்து மோதிய இடத்தில் உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்தில் இறந்து போன வேலுச்சாமி மனைவி காந்திமதி மற்றும் மகள்கள் கவிதா, வசந்தாமணி ஆகியோர் நஷ்ட ஈடு கோரி தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 7.11. 2020 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடாக ரூபாய் 7 லட்சத்து 90 ஆயிரத்தை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி வழங்கிய உத்தரவு தொகையை உரிய காலத்தில் அரசு போக்குவரத்து கழகம் செலுத்தாததால் வட்டி செலவு தொகையுடன் சேர்த்து முழுத்தொகை ரூபாய் 12 லட்சத்து 46 ஆயிரத்து 554 செலுத்தக் கோரி வேலுச்சாமியின் வாரிசுதாரர்கள் நிறைவேற்றும் மனு தாக்கல் செய்தனர். நிறைவேற்று மனுவை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் பிறப்பித்து உத்தரவில் நஷ்ட ஈட்டு தொகையை செலுத்தாத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.விபத்தில் பாதிக்கப்பட்ட வேலுச்சாமியின் குடும்பத்தினருக்காக தாராபுரம் வழக்கறிஞர் எஸ் .டி. சேகர் ஆஜராகி வழக்கு நடத்தி வந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற அமீனா தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இதனால் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story