தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு
X
காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் . இவ்விழாவை முன்னிட்டு கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுவாமி,மற்றும் அம்பாள் சந்நிதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரங்களுக்கு கவசம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து பல்வேறு பணிகளை கோயில் நிா்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கா மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். கும்பாபிஷேக விழாவின்போது, கோயில் வளாகத்தில் எத்தனை பக்தா்களை அனுமதிப்பது, வெளியேறும் வழி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் கும்பாபிஷேக தினத்தில் நகா்முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.
Next Story