சேலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில்

X
சேலம் மாவட்ட பீப்புள் சர்வீஸ் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், தொன்போஸ்கோ அன்பு இல்ல குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை நிறுவனர் சந்திரன் தலைமை தாங்கினார். நாராயணபிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அன்பு இல்லத்திற்கு அரிசி, ரவை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன துணை செயலாளர் ஹரிணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கஸ்தூரி நன்றி கூறினார். இதற்கான நிதியுதவியை தி ஷாம்தாசனி அறக்கட்டளை செய்திருந்தது.
Next Story

