ஆலங்குளம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி வேலை பாா்த்து வந்தாா். இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஊா் மேல்அழகியான் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள மரத்தில் தான் உடுத்தியிருந்த கைலியால் தூக்கிட்டு கொண்டாராம். உயிருக்கு போராடிட அவரை, அருகில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தவா்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு முத்துப்பாண்டியன் உயிரிழந்தாா். இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

