சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில்

X
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் முதற்கட்ட கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தொடங்கி வைத்தார். பயிற்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான சிறுவர்-சிறுமிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு நீச்சல் பயிற்சியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து பயிற்சியாளர் மகேந்திரன் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து முகாமில் கலந்துகொண்ட சிறுவர்-சிறுமிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, முதற்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. பயிற்சி முகாமில் சிறுவர்-சிறுமிகளுக்கு காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும். இதேபோல் பெண்களுக்கு காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினர்.
Next Story

