மின் பயனீட்டாளர்கள் குறை தீர்ப்பு கூட்டம்

X

காங்கேயத்தில் இன்று மின் பயனீட்டாளர்கள் குறை தீர்ப்பு கூட்டம்
காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட் டம் இன்று (புதன்கிழமை) காங்கேயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மின் பயனீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இந்த தகவலை காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலாதேவி தெரிவித்துள்ளார்.
Next Story