சேலத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

X
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி. அவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 25), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருக்கும் சேலத்தாம்பட்டியை சேர்ந்த மாலினி (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 3 மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மோகன்ராஜ் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த மோகன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் வெள்ளிக்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story

