மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (ஏப்.2) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு இன்று முதல் வரும் ஆறாம் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதி நாளன்று பாண்டி கோயில் அருகே செங்கொடி பேரணி துவங்கி நான்கு வழிச்சாலையில் உள்ள திடலில் மாநாடு நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தோழர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த மாநாட்டிற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து மதுரையில் ஐந்து நாள் தங்கி இருந்து மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அகில இந்திய தலைவர்கள் பலர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.
Next Story




