கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு வழங்கிய அமைச்சர்

X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் ஆத்தூர் தொகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்றவுடன் அதற்கான தீர்வு காண அதிகாரிகளுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். அதன்பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஆத்தூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் அந்தந்த ஊராட்சிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்படும் என்றார்.
Next Story

