வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

X

தூத்துக்குடியில் காவல்துறை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்திற்கு செல்லாமல் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 850 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்காடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் சில வழக்குகளில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது கட்சிக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து நேற்று தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களின் பணியை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய துணை உதவி ஆய்வாளர் முத்தமிழரசன் ஆகியோரை கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது இதை அடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காவல்துறையை கண்டித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது
Next Story