சங்கரன்கோவில் அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றதால் பயணிகள் தவிப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மெயின் பஜார் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பழுதாகி சாலையின் நடுவே நின்றதால் பொதுமக்களும் போக்குவரத்து காவல்துறையும் பேருந்தை சாலை நேரம் நிறுத்துவதற்காக தள்ளிச் சென்ற நிலை உருவானது. சாலையின் நடுவே நின்ற அரசு பேருந்தில் தானியங்கி கதவுகள் அனைத்தும் மூடிக்கொண்டதால் உள்ளே இருந்த பயணிகள் வெளியே வர முடியாமல் கடும் அவதி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு பழுது சரி செய்யப்பட்டு பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டு சென்ற அரசு பேருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளால் பரபரப்பு. இது குறித்து வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story

