திருச்செந்தூர் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு: ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கை!

X

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் 4 அடி உயரக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் 4 அடி உயரக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடர்கிறது. இந்நிலையில், அமாவாசையான சில நாள்களுக்கு முன்பு, கடல்நீர் சுமார் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதில், கரை ஒதுங்கிக் கிடந்த சுமார் 4 அடி உயரக் கல்வெட்டை, பௌர்ணமி சித்தர் கண்டெடுத்தாராம். அதில், ‘கந்த மாதன தீர்த்தம்’ எனத் தொடங்கி சில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தக் கல்வெட்டு உள்ளிட்ட அண்மைக்காலமாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில் நிர்வாகம் உரிய முறையில் பாதுகாப்பதுடன், தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story