நாகை நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு வீர விநாயகர், கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில்

பங்குனி உத்திர பிரமோத்சவ ஆராட்டு விழா துவஜாரோகனம் திருக்கொடியேற்றம்
நாகை நீலா தெற்கு வீதியில், அருள்மிகு வீர விநாயகர், கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பங்குனி உத்திர பிரமோத்சவ ஆராட்டு விழா, நேற்று விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் தொடங்கியது. இன்று (2-ம் தேதி) காலை ரிஷப லக்னத்தில் துவஜாரோகனம் என்ற திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (3-ம் தேதி) முதல் வருகிற 10-ம் தேதி வரை யாக பூஜை, மணிகண்டன் புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஸ்ரீ சட்டநாதர் தீர்த்தத்தில், மணிகண்டன் ஆராட்டு வைபவம் வருகிற 11- ம் தேதி காலை நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற உள்ளது. பின்னர் துவஜா அவரோகணம் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் சபரிநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story