திமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் அறிக்கை

X

கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்க மாவட்டத்தில் நீர்மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் அறிக்கை
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்டவானிலை காரணமாக அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை சமா ளிக்கவும், பொதுமக்களின் தாக்கத்தை தீர்க்கவும் தர்மபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் களில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும். இந்த தண்ணீர் பந்தல்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மோர், எலுமிச்சைசாறு உள்ளிட்ட குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, பழங் கள், வெள்ளரி ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த தண்ணீர் பந்தல்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல் படும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story