முல்லைப் பெரியார் அணை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை எம்புரான் திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அதை நீக்க கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியானது இந்தத் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்று இருப்பதாகவும் அதை நீக்க வேண்டும். கம்பம் நகரில் அமைந்துள்ள எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட் பண்ட் நிறுவனம் முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தினால் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியார் வாழ்கை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் மோகன்லால். பிடித்துள்ள எம்புரான் திரைப்பட த்தில் முல்லை பெரியார் அணை குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன இதை தயாரித்த கோகுலம் சிட் பண்ட் உரிமையாளர் கோபாலன் அவர்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழக விவசாயிகளிடம் எம்புரான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தயாரிப்பாளர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்றும் அதேபோல் தமிழகத்தில் இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
Next Story