வேப்பனப்பள்ளில் விவசாயிகளுக்கு பண்ணை முறை விளக்கம்.

வேப்பனப்பள்ளில் விவசாயிகளுக்கு பண்ணை முறை விளக்கம்.
X
வேப்பனப்பள்ளில் விவசாயிகளுக்கு பண்ணை முறை விளக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டத்தில் உள்ள ராமச்சந்திரன் கிராமத்தில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை பண்ணை முறை குறித்து விளக்கினர். தொடர்ந்து, ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பற்றியும் எடுத்துரைத்தனர். அதனால் விவசாயிகள் எவ்வாறு பயன் அடைவார்கள் என்றும் அவர்களின் வருவாயை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்றும் கூறினர். பண்டைக் காலத்தில்விளை நிலங்களுக்கு மாலை நேரத்தில் தீப்பந்தங்களுடன் செல்லும் விவசாயிகள் அதைகையில் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிபூச்சிகளை அழிப்பார்கள். இதை முன்னுதாரணமாகக் கொண்டே, சூரிய ஒளியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அலைவரிசையில் உள்ள புற ஊதாக் கதிர்களின் வழியாக நன்மை செய்யும் பூச்சிகளை விடுத்து. தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கும் வகையில் இந்தசூரிய ஒளிவனவிளக்குப் பொறியைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
Next Story