ஆடுகள் பலி

ஆடுகள் பலி
X
ஒரே நாளில் 4 ஆட்டுப்பட்டிகளில் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்து கொன்றுது
சென்னிமலை அருகே நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 4 ஆட்டுப்பட்டிகளில் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்து கொன்று விட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் பனங்காட்டை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து சுமார் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து 17 ஆடுகளை கடித்துள்ளது. அப்போது ஆடுகள் பயந்து ஆட்டுக்குட்டியை விட்டு வெளியே ஓடி உள்ளது. இதில் துரத்தி துரத்தி தெருநாய்கள் ஆடுகளை கடித்ததில் இதில் 14 ஆடுகள் ஆங்காங்கே இருந்து கிடந்துள்ளதை நேற்று காலையில் பார்த்துள்ளனர்.அதேபோல் சென்னிமலை அருகே பாலதொழுவு ராசாப்பாளையம் நசியாந்தோட்டத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் ஆட்டுப்பட்டிக்குள் 2 தெரு நாய்கள் புகுந்து ஒரு செம்மறி ஆட்டு குட்டியையும், மேலும் இதே ஊரை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் 2 ஆடுகளையும், தண்டபாணி என்பவருக்கு சொந்தமான ஒரு ஆட்டையும் பர்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்து கொன்றுவிட்டது. இதில் சில ஆடுகள் படுகாயங்களும் அடைந்துள்ளது. படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு அந்த பகுதி கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். சென்னிமலை பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வரும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story