இரண்டாவது ஆண்டாக முருகப்பெருமானுக்கு சீர்வரிசை

இரண்டாவது ஆண்டாக முருகப்பெருமானுக்கு சீர்வரிசை
X
சென்னிமலையில் மலை மேல் உள்ள வள்ளி- தெய்வானைக்கும், முருகப்பெருமானுக்கும் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை சார்பாக சீர் வழங்கும் நிகழ்ச்சி 2-ம் ஆண்டு நிகழ்ச்சியாக சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.‌
சென்னிமலையில் மலை மேல் உள்ள வள்ளி- தெய்வானைக்கும், முருகப்பெருமானுக்கும் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை சார்பாக சீர் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 2-ம் ஆண்டு நிகழ்ச்சியாக சீர் வழங்கும் நடைபெற்றது.‌ இந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் மாநில தலைவர் குறிஞ்சி ப.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சென்னிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் ஏ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராககாங்கேயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ என்.எஸ்.என்.நடராஜ் கலந்துகொண்டு சென்னிமலை குமரன் சதுக்கத்திலிருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பெண்கள் பல வகையான சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலுக்கு சென்றனர்.‌இந்த நிகழ்ச்சியில் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் பரமசிவம், இந்து சமத்துவ கட்சி மாநில தலைவர் டாக்டர் விக்ரம், ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாநகர மாவட்ட ஆலோசகர் கலைஞர் பெரியசாமி, திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் முத்தூர் துரைசாமி, மாநில அமைப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பேரவையின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story