கோவில் விழாவில் பங்கேற்க தடுக்கின்றனர் எஸ் பி யிடம் புகார்

X

நம்பியூர் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கோவில் திருவிழாவில் பங்கேற்காமல் தடுக்கின்றனர் எஸ்.பி .அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கரட்டுப்பாளையம், அண்ணமார் கோவில் வீதியை சேர்ந்த சண்முகம் மற்றும் அவர் குடும்பத்தினர் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-நாங்கள் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் எங்கள் முன்னோர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் ஆகியோர் இணைந்து ஊருக்கு பொதுவான அண்ணமார் மற்றும் பட்டதளசி கோவில் நிறுவி பல வருடங்களாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் 2024 ஆம் ஆண்டு பொது கோவிலை புதுப்பித்து கட்டுவதற்கு ஏற்பாடு செய்து ஊர் பொதுமக்களால் வீடுகளுக்கு ரூ.15,000 வசூல் செய்தார்கள். ஆனால் என் குடும்பம் மற்றும் எனது தம்பி குடும்பம் ஆகியோர்களிடம் கோவில் கட்ட வீட்டு வரி வாங்காமலும் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டதாக சொல்லி ஊரின் முக்கிய நபர்கள் சொல்லியும் எங்களை எவ்வித பொது நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை. தற்போது கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது எங்களை யாரும் அழைக்காமல் நடத்தி முடித்து விட்டார்கள். வருகிற 11ஆம் தேதி கோவில் திருவிழா நடைபெற உள்ளது. எங்கள் குடும்பங்களை கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வீடுகளுக்கு வாங்கப்படும் கூட்டு வரி பணம் வாங்காமலும் எங்களை எங்கள் குடும்பத்தை இழிவு செய்தும் பொதுவெளியில் அவமானம் செய்வதோடு எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஊரை சேர்ந்த சிலர் சொல்லி வருகின்றனர். எனவே தாங்கள் என்னையும் என் தம்பி குடும்பத்தையும் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். எங்களை ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Next Story