ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

பூசாரிப்பட்டி பகுதியில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வில் வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்.
தருமபுரி அதகப்பாடி அருகே பூசாரிப்பட்டி கிராமத்தைச் சார்ந்த பாரத் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார் கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் மாநிலம் வதோதராவில் பணியாற்றி தற்பொழுது 17 ஆண்டு காலம் பணி முடிந்து ஓய்வில் இன்று சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார் நாட்டுக்காக 17 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வில் வீடு திரும்பிய இராணுவ வீரரை கிராம மக்கள் ஒன்றிணைந்து மேல காலங்கள் முழுக மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர் மேலும் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் ராணுவ வீரருக்கு சல்யூட் அடித்து வரவேற்பு கொடுத்தனர். 17 ஆண்டு காலம் பணி நாட்டுக்காக பணி செய்துவிட்டு வீடு திரும்பிய ராணுவ வீரரை கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் ராணுவ வீரர் பாரத் தங்கள் கிராமத்தில் பெரும்பாலான ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.இனிவரும் காலங்களில் இளைஞர்கள் யாரேனும் ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் தன்னிடம் வந்தால் உரிய பயிற்சிகளை கொடுத்து ராணுவத்திற்கு அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
Next Story