சத்தியமங்கலத்தில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

X

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு 6-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு கம்பம் நடும் விழா இன்று நடக்கிறது. குண்டம் விழா வருகிற 7-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 8-ந் தேதி மாலை வரை நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் இன்றி கர்நாடகா மாநில பக்தர்களும் பங்கேற்பார்கள். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் குண்டம் விழாவை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு வருகிற 6-ம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வகை வாகனங்களும் சத்தியமங்கலத்தில் இருந்து வடக்கு பேட்டை டி. புதூர் நால்ரோடு, கடம்பூர், கேர்மாளம், அரே பாளையம் , ஆசனூர் வழியாக செல்ல வேண்டும். கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆசனூர், திம்பம், பண்ணாரி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு செல்லும் காய்கறி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் ஆசனூர், அரே பாளையம், கேர்மாளம், கடம்பூர், டி.ஜி.புதூர் நால்ரோடு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும். மைசூரில் இருந்து கர்கேகண்டி, தட்டக்கரை, பர்கூர், தாமரைக் கரை வழியாக அந்தியூர் வந்து ஈரோடு செல்லலாம். ஈரோட்டில் இருந்தும் இவ்வழியை கர்நாடகா செல்ல பயன்படுத்தலாம். போக்குவரத்து மாற்றம் 8-ந் தேதி வரை அமலில் இருக்கும். பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து போக்குவரத்து மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story