ஹாரன் அடித்ததால் ஓட்டுநர்கள் வாக்குவாதம்

X

சித்தோடு அருகே அரசு பஸ் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஹாரன் அடித்ததால் ஆத்திரம்
சித்தோடு அரஈரோடு பஸ் நிலையத்திலிருந்து 3-ம் நம்பர் கொண்ட அரசு நகர பஸ் வீரப்பன் சத்திரம், சூளை, கனிராவுத்தர் குளம், மாமரத்து பாளையம், சித்தோடு, லட்சுமி நகர் வழியாக பவானி வரையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இந்த அரசு நகர பஸ் சித்தோடு பகுதிக்கு பயணிகளுடன் வந்தபோது சித்தோடு பகுதியில் உள்ள மஞ்சள் மண்டி வளாகத்தில் இருந்து கார் ஓன்று வெளியே வந்து உள்ளது. கார் வெளியே வந்து திரும்புவதை பார்த்த அரசு பஸ் ஓட்டுநர் பஸ் உள்ள ஹாரனை அடித்து உள்ளார். பஸ் முன்னாள் தொடர்ந்து சென்ற கார் பஸ் வழி விடாத நிலையில் தொடர்ந்து பஸ் ஓட்டுநர் ஹாரனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து காரை சாலையின் நடுவே அரசு பஸ்சுக்கு முன்பாக நிறுத்தி காரில் இருந்து இறங்கிய நபர் அரசு பஸ் ஓட்டுநரை தாக்க முயன்றார். இதனை கண்ட பொதுமக்கள் காரில் இருந்தவரை சமாதானம் செய்து அனுப்ப முயன்றனர். ஆனால் மது போதையில் இருந்ததாக கூறப்படும் காரில் வந்த நபர் தொடர்ந்து அரசு பஸ் ஓட்டுநரை தாக்க முயன்றதுடன் தகாத வார்த்தையில் பேசினார். இதன் பிறகு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் காரை எடுக்க பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து காரை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு மீண்டும் காரில் இருந்து இறங்கி பஸ்சை வழி மறித்து தனது செல்போனில் அரசு பஸ்சை படம் எடுத்து கொண்டதுடன் எங்கு இருந்து உனக்கு என்ன வருமோ அது வரும் என அரசு பஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து காரில் வந்தவரிடம் இந்த இடத்தில் இருந்து காரை எடுக்கும்படி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து காரில் வந்தவர் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story