ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

X

ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 10-ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது
ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 10-ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சோமநாதசுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 2-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) சோமாஸ்கந்தர் எழுந்தருளலும், 4-ந்தேதி குடவருவாயில் தீபாராதனையும், சுவாமி- அம்பாள் ரிஷப வாகன காட்சியும் நடைபெறுகிறது. 7-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடராஜர் உருகுசட்ட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து நடராஜர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளலும், சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று அம்சங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. 9-ந்தேதி பிச்சாடனர் திருவீதி உலா நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 10-ந்தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, தக்கார் பாலமுருகன், ஆய்வாளர் செந்தில்நாயகி மற்றும் மண்டகப்படிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story