அதிமுக பூத் கமிட்டி பணி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு

X

உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் பூத் கமிட்டி ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசி ராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, ஆர்.எம்.கே.எஸ். சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story