தூத்துக்குடி பள்ளி ஆசிாியைக்கு சிங்கபெண் விருது!

X

சென்னையில் அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சிங்கபெண் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சிங்கபெண் விருது வழங்கப்பட்டது. சென்னை அரக்கோணத்தில் அருந்தமிழ்ச்சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பெண் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சாதனைப் பெண்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. விழாவில் தூத்துக்குடி ஜின்பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சபிதாவுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இவரது தமிழ் பற்றைப் பாராட்டி தொலைக்காட்சி பட்டிமன்ற பேச்சாளர் ஜெகதீஸ்வரி இவருக்கு அருந்தமிழ் தாரகை விருது வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருந்தமிழ் சங்க நிறுவனர் கேத்தரின் மெட்டில்டா செய்திருந்தார்.
Next Story