தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்!

X

தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்
தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு வட்ட செயலாளர் மில்லை ராஜா ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமுhன சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து நீர் மோர் இளநீர் தர்பூசணி பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ராஜகோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர், ராஜாராம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் உள்பட கலந்து கொண்டனர்..
Next Story