ராமநாதபுரம் ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது புகார் மனு

புது மடத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம் முதியோர்கள் கலெக்டர் இடம் புகார் மனு அளித்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புது மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் அருகே புறம்போக்கு நிலத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது இந்த மரத்தின் நிலையில் அரசு தொலைக்காட்சி கட்டிடம் உள்ளது மேலும் இந்த மரத்தில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகிறது கால்நடைகள் மனிதர்கள் நிழலுக்கு அதிகம் பயன்படுத்தி வந்தனர் இந்தப் பகுதியில் கிராம சபா கூட்டமும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் கிராமத்திற்கு சம்பந்தமில்லாத சிலர் அரசு அனுமதி பெறாமல் உன் அறிவிப்பு இல்லாமல் ஆலமரத்தை வெட்டி அகற்றி உள்ளனர் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல விடாமல் தடை ஏற்படுத்தி உள்ளனர் இந்த சம்பவத்தை கண்டித்து புதுமடம் ஊர் தலைவர் நீலமேகம் தலைமையில் ஏராளமான முதியோர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர் அதில் எண்ணுறு ஆண்டுகள் பழமையான மரத்தை அரசு அனுமதி இல்லாமல் வெட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆலமரம் உள்ளது போல் அதே நேரத்தில் புதுமடம் பகுதியிலும் இந்த பழமை வாய்ந்த ஆலமரம் வைக்கப்பட்டது பறவைகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் உதவிகரமாக இருந்த இந்த ஆலமரத்தை அகற்ற முயற்சி செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்
Next Story