வேலை வாங்கி தருவதாக மோசடி

வேலை வாங்கி தருவதாக மோசடி
X
பெண் கைது
குலசேகரம் அருகே உள்ள ஆரணி பகுதி சேர்ந்தவர் அருள் ஸ்டாலின் (40) ராணுவ வீரரான இவர் 2021 இல் ஓய்வு பெற்றார். அப்போது இவருக்கு திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அனிஷ் மோன் (36) என்பவரின் அறிமுகம் கிடைத்து, போலந்து நாட்டில் அதிக சம்பளத்தில் வங்கி வேலை வாங்கி தருவதாக அனிஷ் கூறிஉள்ளார்       இதை நம்பிய அருள் ஸ்டாலின் பல தவணைகளில் ரூ. 27 லட்சத்து 96 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னர் கொடுத்த  வேலைக்கான உத்தரவு போலி என தெரிந்தது. இதையடுத்து அருள் ஸ்டாலின் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். 6 மாதத்தில் பணத்தை தந்து விடுவதாக கூறிய அனிஷ் மோன் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.       இதனால் ஏமாற்றம் அடைந்த அருள் ஸ்டாலின் தான் கொடுக்கும் போது அவருடன் இருந்த அவரது மனைவி பொலின் ( 33) என்பவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் கூறாததால் இந்த மோசடி தொடர்பாக தக்கலை போலீசில் புகார் செய்தார்.      அந்த புகாரின் பேரில் கணவன் மனைவியான அனீஸ் மோன், பொலின் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று பொலினை போலீசார் கைது செய்தனர். அவரது கணவர் அனீஷ்  மோன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவர் வந்த பிறகு அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Next Story