தக்கலை : கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை : கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு
X
பைக்குகள் சேதம்
தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியை சிறந்தவர் ஆரோக்கியம் (46). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை சைக்கிளில் வீட்டிலிருந்து முட்டை காடு பகுதிக்கு சென்றார். சைக்கிளை சாலையோரம் நிறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தக்கலை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆரோக்கியத்தின் மீது மோதி அவரை இழுத்துச் சென்று,  அருகில் உள்ள கடையோடு சேர்த்து அவரை நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார்.       பின்னர் காரன் காரின் வேகம் குறையாமல் சாலையோரம்  நின்ற 6க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளையும், ஏடிஎம் மையத்தின் தூண், மருந்து கடையின்  முன்பக்க கண்ணாடி போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து தள்ளிவிட்டு நின்றது.       அந்த பகுதியில் ஆட்கள் இல்லாத கரணத்தால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. கொற்றி கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரோக்கியத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து காரை ஓட்டி வந்த வேர்க் கிளம்பி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெபின் (21) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story