திருவட்டார் கோவில் விழா தொடங்கியது

திருவட்டார்  கோவில் விழா தொடங்கியது
X
ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக நேற்று மாலை ஆற்றூர் பள்ளிக் குழி விளை சாஸ்தா கோவிலில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாக கொண்டு வந்து திருவட்டாறு ஆதிகேசவன்  கோவிலில் கருவறையில் சமர்ப்பிக்கப்பட்டது.     முதல் நாளான இன்று காலை 5 மணிக்கு ஹரி ராம கீர்த்தனம், 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 : 45 மணியளவில் இருந்து 9:30 மணிக்குள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றம் நடந்தது அதை தொடர்ந்து.  மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி  ஆகியன நடக்கிறது.       நாளை காலை 8 மணிக்கு நாராயணீய பாராயணம், இரவு 7:30 மணிக்கு திருவாதிரை களி, இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், பத்து மணிக்கு ருக்மணி சுயம்வரம், கதகளி ஆகியவை நடக்கிறது.       தொடர்ந்து 11-ம் தேதி வரை இந்த விழாக்கள் தினமும் பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது.
Next Story