சாலை பணியை பார்வையிட்ட கலெக்டர்

சாலை பணியை பார்வையிட்ட கலெக்டர்
X
மார்த்தாண்டம்
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சசித்தலைவர் அழகுமீனா இன்று  செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-  தேசிய நெடுஞ்சாலை சார்பில் மார்த்தாண்டம் பகுதியில் ஒருமுறை மேம்பாடு செய்தல் திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ரூ.14.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வைப்புநிதி வேலையாக 12.23 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி திருநெல்வேலி. தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியிலிருந்து குலசேகரம் செல்லும் சாலை திருப்பு வரை இருபுறங்களிலும் 230 மீட்டர் நீளத்தில் பேவர் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ப்பட்டது. மேலும் மழை நீர் ஆனது வடிகாலில் பாய்ந்து செல்ல ஏற்றவாறு சாலையை அமைக்குமாறும். இப்பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில்  தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சேவியர் தெரஸ், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story