சாலை தடுப்பில் டூவீலருடன் சென்று மோதியவர் பலி

X
மதுரை அருகே திருநகர் பொன்னமங்கலம் நடுத் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் வேல்முருகன் (32) என்பவர் மண்டேலா நகர் வழியாக நேற்று முன்தினம் (மார்ச்.31) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் மையத்தடுப்பில் மோதியதில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வேல்முருகனை மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழி யிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

