கோவில் விழாவில் மாணவர்களுக்கு பரிசு

X

மண்டைக்காடு
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடந்து வருகிறது. விழாவில் நிறைவு நாளான நேற்றிரவு பள்ளி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு நடந்தது. இது போல் சமய வகுப்பு மாணவர்களுக்கும் , திருவிளக்கு பூஜையில் தொடர்ந்து பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் பரிசு வழங்கினர். மணவாளக்குறிச்சி மணல் ஆலை மேலாண் மை இயக்குனர் செல்வராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். உபயதாரர்கள் கவுர விக்கும் நிகழ்வும் நடந்தது. இதில் கோயில் வளாகம் முன்பு தரைத்தளம் அமைத்து தந்த அறங்காவலர் குழு தலைவரை பாராட்டி வாழ்த்தினர். வெள்ளிமலை திமுக பேரூர் செயலாளர் ரங்கராஜா, கோயில் நிர்வாக தலைவர் ராசாமணி, செயலாளர் சுந்தரராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story