பாசன கால்வாய் பார்வையிட்ட கலெக்டர் 

பாசன கால்வாய் பார்வையிட்ட கலெக்டர் 
X
கல்குளம்
கன்னியாகுமரி மாவட்ட நீர்வள ஆதாராத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று  நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்:-  கோதையாறு வடிநில கோட்டத்தின் கீழ் உள்ள முட்டம் கால்வாய் 2/750 கி.மீட்டரில் ரூ.17.50 இலட்சம் மதிப்பில் 106 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கான்கிரீட் லைனிங் பணியினை பார்வையிட்டதோடு, கரையின் உறுதித்தன்மையினை உறுதிசெய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்குளம் வட்டத்துக்குட்பட்ட தலக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு காலத்தில் பழுதடைந்த தலக்குளம் வள்ளியாறு பாலத்தின் கீழ்புறத்தில் வள்ளியாற்றின் இடதுகரையில் ரூ.22.57 இலட்சம் மதிப்பில் 20.20 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதுகாப்பு சுவர் அமைக்கபட்டு வரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மீண்டும் பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பக்கவாட்டு சுவர்கள் பாதுகாப்புடனும், உறுதித்தன்மையுடனும் இருப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்வதோடு, கண்காணித்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என கூறினார்.       நிகழ்ச்சியில் நீர்வள ஆதாராத்துறை செயற்பொறியாளர் அருள்சன்பிரைட், கோதையாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் வின்ஸ்டன் லாரன்ஸ் (தக்கலை), செல்வ உமா (இரணியல் பாசனப்பிரிவு), கதிரவன் (தக்கலை பாசன சிறப்பு பிரிவு),   துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story