குமரி : கிரைண்டர் செயலி மூலம் மோசடி 

குமரி : கிரைண்டர் செயலி மூலம் மோசடி 
X
3 பேர் கைது
கிரைண்டர் என்ற கே சாட் என்பது   இணையதளம் மூலம் அரங்கேறி வரும் பாலியல் சம்பந்தமான குற்றம் ஆகும். Grindr என்ற Gay Chat செயலியை பயன்படுத்தி அதே எண்ணம் உடைய ஆண்களை குறிவைத்து பேசி பழக்கத்தை ஏற்படுத்தி நேரில் வரவழைக்கின்றனர்.நேரில் வந்த பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தையும், அவர்கள் அணிந்து வந்திருக்கின்ற நகைகளையும் ஏமாற்றி எடுத்து கொண்டு அனுப்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என நினைத்துக் கொண்டு பலபேர் புகார் கொடுக்கவும் தயங்குகின்றனர்.     குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக அந்த மாதிரியான ஆண்களை குறிவைத்து நேரில் வரவழைத்து பணம் நகைகளை ஏமாற்றிய, புன்னை நகர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் ஜோ என்பவரின் மகன் ஆன்றோ ததேயு மீசல் (23), குலசேகரபுரம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மதுகுமார் என்பவரின் மகன் சூர்யா (24), எறும்புகாடு, தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் அஜெய்(25), ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.       அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மூன்று நபர்களால் 15க்கும் மேற்பட்ட நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று நபர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்க மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாவது:- Grindr போன்ற செயலியை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நலம். உங்களுடைய பணம் நகைகளை பறிகொடுக்க வாய்ப்பிருப்பதால் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன்  இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Next Story