அதிமுக தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அதிமுக தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X
கலெக்டர் அலுவலகம் முன்பு
குமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூட தொழிலாளர்கள் நியாயமான முறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய  ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தர கோரி சுமார் 111 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் செவி சாய்க்காத நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கம் சார்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரசு ரப்பர் கழக தொழில் கூட தொழிலாளர்கள் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.        இதில்அரசு ரப்பர் கழகத்தில் நிரந்தர வேலை மருத்துவ சிகிச்சை, பணிக்கொடை, வருங்காலவைப்பு நிதி மற்றும் ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) பிரச்சனைகள் போன்றவைகள் கோசமாக எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது முதலாவது பேசிய ரப்பர் தொழில் கூட தொழிலாளியும் தொழிற்சங்க நிர்வாகியுமான சேகர் பேசும்போது    111 நாட்களுக்கு மேலாக தொழிற்கூடத் தொழிலாளிகளின் தேவைகளுக்காக போராடிவரும் எங்களின் போராட்டத்திற்கு இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை ஆகவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்கள் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணும் படி கேட்டுக் கொண்டார்.        நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியபன் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  குறித்து விளக்க உரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story